ஔவையார்

மெரினா கடற்கரையில்இருக்கும் சிலை
ஔவையார் நன்கு அறிமுகமான ஒரு பெண்பாற் புலவர். ஔவையார் என்னும் பெயர் பூண்ட புலவர்கள் பலர் இருந்தனர். நூலமைதி, தமிழ்நடை, தொடர்புடையோர் முதலானவற்றைக் கருத்தில் கொண்டு வரலாற்று நோக்கில் பார்க்கும்போது அவர்கள் வெவ்வேறு காலத்தில் வாழ்ந்தவர்கள் என்பது புலனாகும்.[1]

காலந்தோறும் ஔவையார்[1][தொகு]

என்று பாகுபடுத்திக் காணமுடிகிறது. சங்க கால புலவர் அவ்வை அதியமான் காலத்தில் வாழ்ந்தவர், அக்காலத்தில் வாழ்ந்தவரே கபிலர், கபிலரின் நன்பனான பாரியின் மகள்களான அங்கவை , சங்கவை இருவரின் திருமணத்திற்கு முயற்சி மேற்கொண்டவர்கள் அவ்வையும் , கபிலரும் ஆவர்.
அன்றியும் ஔவையார் நூல்கள் பட்டியலில் வரும் பல நூல்கள் பெயரளவிலேயே காணப்படுகின்றன. அவை
கல்வியொழுக்கம்
நன்னூற்கோவை
நான்மணிக்கோவை
நான்மணி மாலை
அருந்தமிழ் மாலை
தரிசனப்பத்து
பிடக நிகண்டு

ஔவையார் 6 பேர், காலவரிசை[1][தொகு]

எண்குறியீடுகாலம்பாடல்பாடல் பெற்றோர்வரலாறு
1சங்க காலம்கி.பி. 2-ஆம் நூற்றாண்டுக்கு முன்அகம்புறம்நற்றிணைகுறுந்தொகைசேர சோழ பாண்டியர், நாஞ்சில் வள்ளுவன் முதலானோர்அதியமானுக்கு நெல்லிக்கனி
2இடைக்காலம்கி.பி. 10-ஆம் நூற்றாண்டுக்கு முன்-மூவேந்தர்அங்கவை சங்கவை மணம்
3சோழர் காலம்12-ஆம் நூற்றாண்டுஆத்திசூடிகொன்றை வேந்தன்நல்வழிமூதுரைஅசதிக்கோவைசோழர், அசதிஅசதி, விக்கிரம சோழன்  ,
4சமயப் புலவர்14-ஆம் நூற்றாண்டுஔவை குறள்விநாயகர் அகவல்விநாயகர்அகவல் பாடல்கள்
5பிற்காலம் – 116, 17-ஆம் நூற்றாண்டு--தமிழறியும் பெருமான் கதை
6பிற்காலம் – 217, 18-ஆம் நூற்றாண்டுபந்தன் அந்தாதிபந்தன் என்னும் வணிகன்பந்தன் செய்த சிறப்புகள்

சங்ககால ஔவையார்[தொகு]

முதன்மை கட்டுரை: ஔவையார் (சங்ககாலப் புலவர்)
ஔவையாருக்குஅதியமான் அரிய நெல்லிக்கனியை வழங்கியதாக சித்தரிக்கும் சிலை
சங்ககால ஔவையார் நம் கற்பனையில் உள்ளவர் போல முதுமைக் கோலத்தவர் அல்லர். இளமை ததும்பும் விறலி [2][3]
இவர் பாடிய 59 பாடல்கள் சங்கநூல்களில் இடம்பெற்றுள்ளன. அகநானூறு [4]குறுந்தொகை [5]நற்றிணை [6]புறநானூறு [7] ஆகிய தொகுப்பு நூல்களில் அவை உள்ளன. சங்கப்புலவர் பாடல்தொகை வரிசையில் இவர் 9 ஆம் இடம் பெற்றுள்ளார். ஔவை சங்க கால புலவர்களிலலே சிறந்தவர். அவர் எழுதிய ஆத்திசூடி உலகுக்கு நற்கருத்தை கூறி மக்களை நலமுடன் வாழ செய்கின்றது.

ஒளவை என்ற சொல்லின் பொருள்[தொகு]

ஔவை அல்லது அவ்வை என்ற சொல் அவ்வா என்ற சொல்லின் திரிபாக இருக்கலாம் என்ற கருத்து பலரிடம் நிலவுகின்றது.
ஒளவை என்பது மூதாட்டி அல்லது தவப்பெண் என்ற கருத்தை உடையது என்று பழந்தமிழ் அகராதி கூறும்.
பிற்காலத்தில் ஒளவை என்ற சொல், ஆண்டு மற்றும் அறிவு என்பவற்றில் முதிர்ச்சி அடைந்தவர்களைக் குறிக்கும் சொல்லாக விளங்கி்ற்றுப் போலும்.

Comments

Popular posts from this blog